உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபோதையில் வாகனம்; 41 பேர் மீது வழக்குப்பதிவு

மதுபோதையில் வாகனம்; 41 பேர் மீது வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 41 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடிபோதை மற்றும் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுபவர்களால் தினமும் சாலை விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, நேற்று முன்தினம் காணும் பொங்கலையொட்டி மாவட்டம் முழுதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அதில், மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 41 பேர் மீது வழக்கு பதிந்து, அபராதம் செலுத்துவதற்கான ரசீதை வாகன ஓட்டிகளிடம் வழங்கினர்.அதேபோல், பதிவெண் இல்லாத வாகனம், உரிய ஆவணங்கள் இல்லாதது மற்றும் ெஹல்மெட், காரில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியது தொடர்பாக 493 வாகனங்கள் மீது வழக்கு பதியப்பட்டது.மேலும், பொது இடத்தில் மது அருந்தியது தொடர்பாக 70 பேர் மீதும், சாராயம் மற்றும் மதுபாட்டில் விற்றது தொடர்பாக 19 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ