உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உளுந்துார்பேட்டை அருகே பஸ் மோதி முதியவர் பலி

உளுந்துார்பேட்டை அருகே பஸ் மோதி முதியவர் பலி

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த மாரனோடை பகுதியைச் சேர்ந்தவர் சூசை ,60; இவர் நேற்று மாலை 4;00 மணியளவில் வண்டிப்பாளையம் அருகே மழைமாரியம்மன் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கடக்க முயன்றார். அப்போது கரூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் டிராவல்ஸ் பஸ் சூசை மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை உடன் அருகில் இருந்தவர்கள் மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை