உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ஆற்றில் மூதாட்டி சடலம்; போலீசார் விசாரணை

 ஆற்றில் மூதாட்டி சடலம்; போலீசார் விசாரணை

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே ஆற்றில் இறந்து கிடந்த மூதாட்டி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சங்கராபுரம் அடுத்த புதுப்பாலப்பட்டு மணி ஆற்றில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நேற்று இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்து கிடந்த மூதாட்டி, புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி ருக்மணி, 65; என்பதும், இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி