உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மின்சாரம் பாய்ந்து காயமடைந்த மின் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

 மின்சாரம் பாய்ந்து காயமடைந்த மின் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

ரிஷிவந்தியம்: வாணாபுரம் அருகே மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த மின் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வாணாபுரம் அடுத்த மரூர்புதுார் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் அருணகிரி,47; இவர், அரியலுார் மின்நிலையத்தில் ஒயர்மேனாக பணிபுரிகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன் பணியில் இருந்த அருணகிரி, மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு வீட்டில் ஓய்வில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு உடல்வலி தாங்க முடியாமல் அருணகிரிக்கு கத்தியுள்ளார். அப்போது, காலை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக அவரது மனைவி நிர்மலா கூறிவிட்டு துாங்க சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை காலை நிர்மலா எழுந்து பார்த்த போது, அருணகிரி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்