உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

 நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்து கொள்ளுமாறு வேளாண்மை உதவி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். ரிஷிவந்தியம் வேளாண்மை உதவி இயக்குநர் ஷியாம்சுந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பை ஈடு செய்யும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு பருவத்தில் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய வரும் 30ம் தேதிக்குள் பிரீமியம் தொகையாக ரூ.538 செலுத்த வேண்டும். விவசாயிகள் தங்களது சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், ஆதார்அட்டை ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொதுசேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பிரீமியம் தொகை செலுத்தி பதிவு செய்யலாம். பெயர், நிலப்பரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிடப்பட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை சரியாக கவனித்து பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை