உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  உளுந்து பயிருக்கு உகந்த மழை சாகுபடி; விவசாயிகள் மகிழ்ச்சி

 உளுந்து பயிருக்கு உகந்த மழை சாகுபடி; விவசாயிகள் மகிழ்ச்சி

தியாகதுருகம்: மானாவாரியில் சாகுபடி செய்த உளுந்து பயிருக்கு தற்போது பெய்யும் மழை நல்ல ஊட்டத்தை தரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தியாகதுருகம் சுற்றுவட்டார கிராமங்களில் ஆண்டுதோறும் அக்., மாதத்தில் மானாவாரி பயிராக உளுந்து சாகுபடி செய்கின்றனர். வடகிழக்கு பருவமழை ஈரத்தைக் கொண்டு பயிர் செழித்து வளர்ந்து மகசூலை கொடுக்கிறது. பராமரிப்பது எளிது குறுகிய காலத்தில் அறுவடைக்கு தயாராகும். உளுந்துக்கு நல்ல விலை கிடைப்பதால் இதன் சாகுபடி அதிக பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=52fkw9x5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 20 நாட்களுக்கு முன் பெய்த மழை ஈரம் கொண்டு உளுந்து விதைப்பு பணிகளை முடித்தனர். செடி வளரும் நிலையில் நேற்று முன்தினம் தியாகதுருகம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இது உளுந்து பயிருக்கு ஊட்டத்தை கொடுத்து செழித்து வளர கை கொடுக்கும். தகுந்த தருணத்தில் மழை பெய்திருப்பது உளுந்து சாகுபடி செய்த விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி