உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மகள் மாயம் தந்தை புகார்

 மகள் மாயம் தந்தை புகார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், வடதொரசலுார் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகள் வைதேகி, 23; இவர், தனியார் மருத்துவமனை ஊழியர். கடந்த 16ம் தேதி வைதேகியும், அவரது உறவினர் சகுந்தலாவும் ராவுத்தநல்லுாரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றனர். சுவாமி தரிசனம் முடிந்தது, இருவரும் பஸ் மூலமாக கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் வந்தனர். அங்கு சகுந்தலாவை வீட்டிற்கு செல்லுமாறும், சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்து விடுவதாகவும் வைதேகி தெரிவித்தார். ஆனால், நீண்ட நேரமாகியும் வைதேகி வீட்டிற்கு வரவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை ஏழுமலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி