உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  செங்கனாங்கொல்லையில் புதிய துணை மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

 செங்கனாங்கொல்லையில் புதிய துணை மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த செங்கனாங்கொல்லையில் ரூ. 14.65 கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலைய கட்டுமான பணியை அமைச்சர்கள் வேலு, சிவசங்கரன் அடிக்கல் நாட்டில் துவக்கி வைத்தனர். திருக்கோவிலுார் ஒன்றியம், ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட செங்கனான்கொல்லை கிராமத்தில் 14.65 கோடி மதிப்பில் 110/22 கே.வி., துணை மின் நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணி துவக்க விழா நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், எம்.பி., மலையரசன் முன்னிலை வகித்தனர். திருக்கோவிலுார் ஒன்றிய குழு சேர்மன் அஞ்சலாட்சி அரசகுமார் வரவேற்றார். பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு, போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு புதிய துணை மின் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டினர். இதன் மூலம் 16 எம்.வி.ஏ., திறன் கொண்ட இரண்டு மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு,10 கி.மீ., சுற்றளவுக்கு 30 கிராமங்கள் பயன் பெறும். இதனால் 250 மின் மாற்றிகளுக்கு மின்விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சப்கலெக்டர் ஆனந்த் குமார் சிங், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய குழு சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்பிரமணியன், பேரூராட்சி தலைவர் ரேவதி ஜெய்கணேஷ், ஒன்றிய குழு துணை தலைவர் தனம்சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் அய்யனார், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி