உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நகர்ப்புற சுய உதவி குழுக்களுக்கு நிதி

நகர்ப்புற சுய உதவி குழுக்களுக்கு நிதி

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் சுய உதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.அவர் விடுத்த செய்திக்குறிப்பு :கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 2025-26ம் ஆண்டில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன. ஒரு பகுதி அளவிலான கூட்டமைப்பில், 10 முதல் 30 சுய உதவிக்குழுக்கள் வரை இணைந்து கொள்ளலாம்.ஊரகப்பகுதி சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி வழங்குவது போல, நகர்ப்புற பகுதிகளில் உள்ள பகுதி அளவி லான கூட்டமைப்பில் உள்ள சுய உதவிக்குழுக்களுக்கும் வரும் காலத்தில் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்பட உள்ளது. இந்த கூட்டமைப்பில் இணைந்து பயன்பெற வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை