உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தியாகதுருகம் அ.தி.மு.க.,வினருக்கு பொங்கல் பரிசு வழங்கல்

தியாகதுருகம் அ.தி.மு.க.,வினருக்கு பொங்கல் பரிசு வழங்கல்

தியாகதுருகம்: தியாகதுருகம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தியாகதுருகம் அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் தைலம்மாள் அய்யப்பா வரவேற்றார்.பொருளாளர் கதிர்வேல், முன்னாள் ஊராட்சித் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி மணிவண்ணன், சித்தலுார் கோவில் தர்மகர்த்தா மணி, மாவட்ட பிரதிநிதி புஷ்பவல்லி வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பா தனது சொந்த செலவில் வேட்டி, சேலைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.நிர்வாகிகள் குமரவேல், காந்தி, செந்தில்குமார், யசோதை, கோவிந்தராஜ், தர்மலிங்கம், ராஜி, இலியாஸ், பரசுராமன், வெங்கடேசன், கலியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை