உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / எள் பயிரின் ஒருங்கிணைந்த மேலாண்மைப் பயிற்சி

எள் பயிரின் ஒருங்கிணைந்த மேலாண்மைப் பயிற்சி

கள்ளக்குறிச்சி : கோமளுர் கிராமத்தில் வேளாண்மைத் துறை சார்பில் எள்ளில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.திருக்கோவிலுார் அடுத்த கோமளுர் கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் மூலம் நடந்த உள் மாவட்ட பயிற்சி வகுப்பிற்கு திருக்கோவிலுார் அடுத்த கோமளுர் ஊராட்சி தலைவர் மாதுரிதேவி தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கிருஷ்ணகுமார் சிறப்புரையாற்றினார். துணை வேளாண் அலுவலர் மொட்டையாப் பிள்ளை எள் பயிரில் மேலாண்மை செய்து அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.மேலும் திண்டிவனம் வேளாண் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் சமீதா, மண் மாதிரி மற்றும் உயிர் உரத்தின் பயன்கள் குறித்து விளக்கினார்.மானிய திட்டங்கள் குறித்து உதவி வேளாண் அலுவலர் விஜயகுமார், உதவி தோட்டக்கலைத் துறை அலுவலர் ஜோஸ்பின்மேரி பேசினர். ஏற்பாடுகளை ஆத்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை