உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கூவனுார் அகத்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்

கூவனுார் அகத்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்

திருக்கோவிலுார் : கூவனுார் அகத்தீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் நடந்தது.திருக்கோவிலுார் அடுத்த கூவனுார் கிராமத்தில் பழமை வாய்ந்த கற்பூராம்பாள் சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. காலை 10:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கற்பூராம்பாள் சமேத அகத்தீஸ்வரர் தேரில் எழுந்தருள, திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர்.மாலை 5:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சிவாகரன், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் பாலாஜிபூபதி, செயல் அலுவலர் அருள், எழுத்தர் மிரேஷ் குமார், ஊராட்சி தலைவர் அய்யனார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி