உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  உளுந்தாண்டார்கோவில் பள்ளியில் நகராட்சி சேர்மன் ஆய்வு

 உளுந்தாண்டார்கோவில் பள்ளியில் நகராட்சி சேர்மன் ஆய்வு

கள்ளக்குறிச்சி: உளுந்தாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு ஆய்வு செய்தார். உளுந்துார்பேட்டை நகராட்சி உளுந்தாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டடம் விரிசல் ஏற்பட்டு, மழை காலத்தில் ஆங்காங்கே மழைநீர் ஒழுகி வந்தது. கடந்த சில நாட்களுக்கு பெய்த மழை காரணமாக நேற்று முன்தினம் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்கள் அமரும் அறையில் மழைநீர் ஒழுகி தரை முழுதும் ஈரமானது. மாணவர்கள் தரையில் அமர முடியாததால், வேறு வகுப்பறைக்கு மாற்றப்பட்டனர். இது குறித்து தினமலரில் படத்துடன் செய்தி வெளியானது. இதை அறிந்த நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு நேற்று முன்தினம் பள்ளி வகுப்பறைகளை ஆய்வு செய்தார். உடனடியாக சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, புதிய கட்டடம் கட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தார். ஆய்வின்போது, வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை, பள்ளி தலைமை ஆசிரியர் விமலா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சந்திரலேகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை