உள்ளூர் செய்திகள்

என்.எஸ்.எஸ்., முகாம்

கள்ளக்குறிச்சி : மேலுார் முருகா பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பார் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த முகாம் துவக்க விழாவிற்கு கல்லுாரி தாளாளர் ரஹமத்துல்லா தலைமை தாங்கினார். கல்லுாரி தலைவர் ஜெகநாதன், செயலாளர் அல்லாபக்ஷ், முதல்வர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.தலைமை ஆசிரியர் கண்ணன், ஆசிரியர்கள் இமானுவேல், ரவிச்சந்திரன், ஊராட்சி தலைவர் பானுமதி துரைசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். திட்ட அலுவலர் விஜயராஜ் அறிக்கை வாசித்தார்.கணினி ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.தொடர்ந்து என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பள்ளி வளாகத்தைச் சுற்றியுள்ள புதர்களை அகற்றி துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்