உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  சாலை விபத்தில் ஒருவர் பலி

 சாலை விபத்தில் ஒருவர் பலி

மூங்கில்துறைப்பட்டு: -: மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஈருடையாம்பட்டை சேர்ந்த அந்தோணிசாமி மகன் பிரான்சிஸ் சேவியர், 47; இவர் கடந்த 22 ஆம் தேதி காலை 10 மணியளவில், மளிகை பொருட்கள் வாங்குவதற்காக மூங்கில்துறைப்பட்டுக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது, திருவண்ணாமலை மாவட்டம், பெருங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர், 60; , என்பவர் ஸ்கூட்டி பெப் வாகனத்தில், மூங்கில்துறைப்பட்டிலிருந்து வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த இரண்டு வாகனங்களும், கல்லை மெயின் ரோட்டிலுள்ள ஓட்டல் எதிரே மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இரண்டு பேரும், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், பிரான்சி சேவியர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்