| ADDED : நவ 24, 2025 06:57 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவியப் போட்டிகள் நடந்தது. கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். இதில் செவித்திறன் குறைபாடு, இயக்க குறைபாடு, பார்வைத் திறன் குறைபாடு, மனவளர்ச்சி குன்றியோர் என 4 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தன. இதில் 76 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர். தொடர்ந்து ஓவிய ஆசிரியர் மூலம் சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன், செயல் திறன் உதவியாளர் முனுசாமி மற்றும் மாற்றுத்திறனாளிகள், அவர்களது பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.