உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அடிப்படை வசதி கேட்டு சாலை மறியல்

அடிப்படை வசதி கேட்டு சாலை மறியல்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை, தாலுகா நத்தாமூர் காலனி பகுதியில் தார் சாலை, மின்சார, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி பொது மக்கள் மற்றும் புரட்சி பாரதம் கட்சியினர் நேற்று காலை 10:30 மணியளவில் நத்தாமூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அதனை தொடர்ந்து 11:00 மணியளவில் மறியலை கைவிட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை