உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ஸ்கூட்டர் பெட்டியில் இருந்த ரூ 1.98 லட்சம் பணம் அபேஸ்

 ஸ்கூட்டர் பெட்டியில் இருந்த ரூ 1.98 லட்சம் பணம் அபேஸ்

சின்னசேலம்: சின்னசேலம் அருகே ஸ்கூட்டர் பெட்டியில் வைத்திருந்த ரூ 1.98 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சின்னசேலம் அடுத்த தென்சிறுவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 50; இவரது மகள் கோகிலாவிற்கு, திருமண ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக பன்னீர்செல்வம் தனது மனைவி ஜானகியின் சேமிப்பு கணக்கில் உள்ள ரூ. 2 லட்சம் பணத்தை எடுக்க வங்கிக்கு சென்றார். நேற்று முன்தினம் பகல் 1:00 மணிக்கு, நைனார்பாளைம் கிராம வங்கியில் ரூ 2 லட்சம் பணத்தை எடுத்தார். அதில் தங்களது செலவிற்காக 2 ஆயிரம் எடுத்துக் கொண்டு மீதமுள்ள ரூ.1.98 ஆயிரம் பணத்தை தனது ஸ்கூட்டர் பெட்டியில் வைத்தார். பின்னர் அருகில் இருந்த பேக்கரிக்கு சென்று தின்பண்டங்கள் வாங்கி, ஸ்கூட்டர் பெட்டியில் வைக்க திறந்தபோது, அதில் வைத்திருந்த ரூ1.98 லட்சம் பணம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை