உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  விடாமுயற்சியுடன் கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம்: ஐ.ஜி., நரேந்திரன்நாயர் பேச்சு

 விடாமுயற்சியுடன் கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம்: ஐ.ஜி., நரேந்திரன்நாயர் பேச்சு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா குருகுலத்தில் தேர்வில் அதிக மதிபெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. குருகுல தாளாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேம ப்ரியா அம்பா தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார். சென்னை நிர்வாக பிரிவு ஐ.ஜி., நரேந்திரன்நாயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசுகையில்; மாணவர்கள் இடையே விடா முயற்சி இருக்க வேண்டும். விடாமுயற்சியுடன் கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம். நாம் ஒரு செயலை செயும் போது, அது சிறந்தவையாகவும், தனித்துவமாகவும் இருக்க வேண்டும். நமக்குள் இப்படி வாழ வேண்டும் என்று கட்டுப்பாடுகளுடன் வாழ வேண்டும். சுய கட்டுப்பாடு இல்லாவிட்டால் நமது வாழ்க்கை சிறப்பாக அமையாது. நல்லவர்களாகவும், சமுதாயத்தில் சிறந்தவராகவும் வளர வேண்டும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் சந்தோசமாக இருக்க வேண்டும். முகம் மலர்ச்சியோடு இருந்தாலே, செயல்பாடுகளும் சிறப்பானதாக அமையும். கஷ்டங்களை நினைத்து சோர்ந்து விடக்கூடாது. அதிலிருந்து விடுபட மீண்டும் முயற்சித்து அதற்கான மாற்று வழியை தேர்ந்தெடுத்து வெற்றி பெற வேண்டும். மாணவர்கள் சரியாக திட்டமிட்டு கல்விக்கனவை நனவாக்குங்கள் என பேசினார். குருகுல சீனியர் முதல்வர் நிஷ்காமிய ப்ராணா மாஜி துவக்கவுரையாற்றினார். குருகுல முதல்வர் சசிகலா வரவேற்புரையாற்றினார். விழாவில் ஆசிரம சகோதிரிகள், பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்