உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முதலில் அவர்களை நிறுத்தச் சொல்லுங்க கள்ளக்குறிச்சியில் வணிகர்கள் எதிர்ப்பு

முதலில் அவர்களை நிறுத்தச் சொல்லுங்க கள்ளக்குறிச்சியில் வணிகர்கள் எதிர்ப்பு

பிளாஸ்டிக் பொருட்கள் உபகயோகத்தால் இயற்கை வளம் மற்றும் சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனையொட்டி பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தில் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.எளிதில் மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே விற்பனை, உபயோகிக்க வேண்டும். 20 மைக்ரான் தடிமன் குறைந்த பிளாஸ்டிக் பாலீதீன் கவர்கள் விற்பனை செய்ய கூடாது என வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் பெரும்பாலான கடைகளில் எளிதில் மக்காத பாலிதீன் கவர்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை தொடர்பாக அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து பறிமுதல், அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு தற்போது வணிகர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதலமைச்சரின் பசுமைப் படை குழு உறுப்பினர் ஒருவர், கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலருடன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாலீதீன் கவர்கள் விற்பனை தொடர்பாக ஆய்வு செய்து, எந்த மாதிரியான பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்ய வேண்டும் என்று எடுத்துரைத்து விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ஒரு கடையில் ஆய்வு செய்தபோது, அங்கு திரண்ட வணிகர் சங்கத்தினர், முதல்வரின் பசுமை படை குழு உறுப்பினரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.கார்ப்பரேட் நிறுவனங்கள் பிளாஸ்டிக் கவர்களில் பொருட்களை அடைத்து விற்பனை செய்கிறது. அதிகாரிகள் அதன் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால், சிறு வணிகர்கள் விற்பனை செய்தால் மட்டும் நடவடிக்கை எடுக்கின்றீர்கள்.முதலில் கார்ப்பரேட் நிறுவன பொருட்களை ஒழிக்க வேண்டும். இதற்கு தீர்வு ஏற்படும் வரை கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் இனி எந்த அதிகாரியும் பிளாஸ்டிக் கவர்கள், பொருட்கள் விற்பனை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள கூடாது. அவ்வாறு மேற்கொண்டால் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.கடும் வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை