உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மெதுவாக சென்ற அரசு பஸ் கண்ணாடி உடைத்தவர் கைது

மெதுவாக சென்ற அரசு பஸ் கண்ணாடி உடைத்தவர் கைது

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த பயணி மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.திருக்கோவிலுார் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுனராக இருப்பவர் பச்சையப்பன், 32; நேற்று முன்தினம் இரவு அரசு டவுன் பஸ் தடம் எண் 18 டி ஓட்டிக் கொண்டு பாடியந்தல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இரவு 7:50 மணி அளவில் திம்மச்சூர் பாஸ் நிறுத்தம் அருகே நின்ற போது, பஸ்சில் பயணம் செய்த கோமாலுாரைச் சேர்ந்த சின்னசாமி மகன் சுரேஷ், 37; பஸ்சை இவ்வளவு மெதுவாக ஓட்டி செல்கிறாயே என கேட்டு, பஸ்சிலிருந்து கீழே இறங்கி கல்லால் பஸ்சில் பின்பக்க கண்ணாடியை உடைத்தார். இதில் பஸ்சில் பயணம் செய்த பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராஜாராமன் மனைவி வளர்மதி, 48; தலையில் காயமடைந்து மயங்கினார்.நடத்துனரான காமராஜ், 56; வளர்மதியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது, சுரேஷ் கல்லை எடுத்து நடத்துனரை தாக்க முயன்று, கொலை மிரட்டல் விடுத்தார்.இதுகு றித்து காமராஜ் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை