உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருமணமான பெண் படத்தை வலைதளத்தில் வெளியிட்டவர் கைது

திருமணமான பெண் படத்தை வலைதளத்தில் வெளியிட்டவர் கைது

திருக்கோவிலுார் : திருமணமான பெண்ணுடன் இருந்த படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலுார் அடுத்த தகடி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் பாஸ்கர், 33; இவர், திருமணமான 28 வயது பெண்ணுடன் பழகி அவருடன் மொபைல் போன் மூலம் படம் எடுத்துக் கொண்டார்.இந்நிலையில் அந்த பெண் பழகுவதை நிறுத்திக் கொண்டதால் ஆத்திர மடைந்த பாஸ்கர், நீ என்னை விட்டுப் போனால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியவர் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து பாஸ்கரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி