உள்ளூர் செய்திகள்

வாலிபர் மர்ம சாவு

தியாகதுருகம், : சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் மர்மமான முறையில் இறந்த கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.தியாகதுருகம் அடுத்த பழைய சிறுவங்கூர் ஊராட்சிக்குட்பட்ட மாந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேணு மகன் ஆறுமுகம், 37; இவர், சூளாங்குறச்சி மணிமுக்தா அணை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக முறையில் நேற்று காலை 9:00 மணியளவில் இறந்து கிடந்தார்.தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக வேணு அளித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ