உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கூழாங்கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் : டிரைவர் கைது

கூழாங்கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் : டிரைவர் கைது

உளுந்துார்பேட்டை: அக். 31-: உளுந்துார்பேட்டை அருகே கூழாங்கற்கள் கடத்திய டிப்பர் லாரியை டி.எஸ்.பி., அதிரடியாக பறிமுதல் செய்தார். உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி. அசோகன் நேற்று முன்தினம் இரவு உளுந்துார்பேட்டையில் இருந்து சேந்தநாடு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது நகர் பகுதி அருகே சந்தேகப்படும்படியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அதில் அனுமதியின்றி கூழாங்கற்களை தஞ்சாவூருக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. அதன்பேரில் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தும், லாரி டிரைவரையும் போலீசாரிடம் ஒப்படைத்தார். இது குறித்து உளுந்துார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து டிப்பர் லாரி டிரைவரான கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த நடியப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், 44; கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை