உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.திருக்கோவிலூர், கீழையூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர்கள் மதன்மோகன், ராஜசேகரன் மற்றும் போலீசார் நேற்று காலை அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியில் நின்றிருந்த குப்பன் மகன் ராமச்சந்திரன், 30; சரவணன் மகன் சதீஷ், 19; ஆகியோரை பிடித்து சோதனை இட்டதில், அவர்களிடமிருந்து தலா 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இது குறித்து திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை