உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மாநில கோ-கோ போட்டியில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை

 மாநில கோ-கோ போட்டியில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவில் கோ-கோ போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நியமன ஆளுனர் செந்தில்குமார், மண்டல துணை ஆளுனர் மூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் கலாபன் முன்னிலை வகித்தனர். செயலாளர் பிரகாஷ், பொருளாளர் முருகன் வாழ்த்தி பேசினார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி வரவேற்றார். கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான 17 வயதுக்குட்பட்ட பிரிவு கோ-கோ போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது திருச்சியில் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர். இப்பள்ளி கோ-கோ வீரர்கள் தொடர்ந்து 4வது முறையாக மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர். வரும் டிசம்பர் மாதம் திருச்சியில் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க செல்லும் இப்பள்ளி வீரர்கள் 12 பேருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் சீருடை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் இமானுவேல் சசிக்குமார், கண்ணன், பெருமாள், செல்வராஜ், சஞ்சீவ்குமார், ஞானராஜ், சுரேஷ்பாபு, முத்துசாமி பங்கேற்றனர். பள்ளி உடற்கல்வி இயக்குனர் சிவாஜி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை