உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 15 சவரன் திருட்டு

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 15 சவரன் திருட்டு

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து, 15 சவரன் தங்கம் மற்றும் 200 கிராம் வெள்ளி நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் செல்வப்பெருமாள் நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் இளவரசன், 40; தனியார் நிறுவன மேலாளார். மனைவி மற்றும் மகனுடன் தங்கி, வல்லம் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால், மனைவி சுகன்யா மற்றும் மகன் ரோஹித் இருவரும், கடந்த மாதம் சொந்த ஊரான மேட்டூர் சென்ற நிலையில், இளவரசன் தனியாக வீட்டில் இருந்து வந்தார்.நேற்று காலை இளவரசன் வழக்கம் போல் வேலைக்கு சென்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, 17 சவரன் தங்கம் மற்றும் 200 கிராம் வெள்ளி நகைகள் திருடு போனது தெரிந்தது.இதுகுறித்து, இளவரசன் ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி