உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நால்வர் விளையாடும் வாலிபால் போட்டியில் 16 அணிகள் மோதல்

நால்வர் விளையாடும் வாலிபால் போட்டியில் 16 அணிகள் மோதல்

சென்னை, மயிலாப்பூரில் நடக்கும் நால்வர் பங்கேற்கும் வாலிபால் போட்டியில், 16 பள்ளி அணிகள் மோதி வருகின்றன.செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப் பள்ளியில், முதல் முறையாக, '4 ஏ - சைடு' எனும் நால்வர் விளையாடும் வாலிபால் போட்டி, மயிலாப்பூரில் உள்ள பள்ளி மைதானத்தில் துவங்கி உள்ளது.ஓபன் முறையில் நடக்கும் இப்போட்டியில் செயின்ட் பீட்ஸ், கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ., - அடையார் பாலவித்யா மந்திர், திருவான்மியூர் அரசு பள்ளி உட்பட 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள், நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் மோதி வருகின்றன. இதில் தேர்வாகும் அணிகளும், சூப்பர் லீக் அடிப்படையில் அரையிறுதியில் மோத உள்ளன.காலிறுதி ஆட்டத்தில், ஆலந்துார் மான்போர்ட் அணி, 25 - 21 என்ற கணக்கில் ஸ்கை ஸ்பிக்கர் அணியையும், பி.எம்.எஸ்., அணி, 25 - 17 என்ற கணக்கில் ஏ.இ.எம்., பள்ளியையும் தோற்கடித்தன.சங்கர சீனியர் அணி, 25 - 19 கணக்கில் பாலவித்யா மந்திர் அணியையும், செயின்ட் பீட்ஸ் அணி, 25 - 19 என்ற கணக்கில் கண்ணகி நகர் அரசு பள்ளியையும் வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றன. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி