உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பிரதான குழாயில் உடைப்பு இரு மாதமாக வீணாகும் குடிநீர்

பிரதான குழாயில் உடைப்பு இரு மாதமாக வீணாகும் குடிநீர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகளில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல், வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளைகுழாய் அமைக்கப்பட்டு, குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப் பட்டு வருகிறது.இந்நிலையில், பெரிய காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதி, ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் நுழைவாயில் வளைவு அருகே, நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த இரு மாதங்களுக்கு மேலாக குடிநீர் வீணாகி வருகிறது.இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வழிந்தோடுவதால், இப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் இந்த சாலை வழியாக தினமும் சென்று வருகின்றனர். ஆனால், குழாய் உடைப்பை சீரமைக்க வில்லை. எனவே, குடிநீர்'குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை