மேலும் செய்திகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் பெருங்கோழியில் விபத்து அபாயம்
15 hour(s) ago
விவசாயிகள் தின விழா
15 hour(s) ago
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
16 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி சாலையில் இருந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி 51வது வார்டு தேனம்பாக்கத்திற்கு செல்லும் சாலையில், வேகவதி ஆற்றின் குறுக்கே, 9.80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சிறுபாலம், கடந்த பிப்., மாதம் திறக்கப்பட்டது.இந்த பாலத்தின் வழியாக தேனம்பாக்கம், அஞ்சூர் உள்ளிட்ட கிராமத்தினர் சென்று வருகின்றனர். சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் இல்லாததால், இவ்வழியாக செல்லும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும், இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள், எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, வேகவதி ஆற்றில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.மேலும், இந்த பாலத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக, இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.எனவே, தேனம்பாக்கத்திற்கு செல்லும் சாலையில், வேகவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
16 hour(s) ago