மேலும் செய்திகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் பெருங்கோழியில் விபத்து அபாயம்
22 hour(s) ago
விவசாயிகள் தின விழா
22 hour(s) ago
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
22 hour(s) ago
கடம்பத்துார்:திருவள்ளூர் லோக்சபா தொகுதி தி.மு.க., கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் நேற்று கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சியிலிருந்து தன் பிரசாரத்தை துவக்கினார்.தொடர்ந்து கடம்பத்துார் ஒன்றியம் கீழ்நல்லாத்துார், மேல்நல்லாத்துார், அதிகத்துார், ஏகாட்டூர் வழியாக கடம்பத்துாருக்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது அதிகத்துார் - ஏகாட்டூர் இடையே உள்ள சென்னை - அரக்கோணம் ரயில்வே கடவுப்பாதையை கடக்கும் போது ரயில்வே கேட் மூடுவதற்கான அலாரம் அடித்தது. அதற்குள் வேட்பாளரின் பிரசார வாகனமும் உடன் வந்த இரண்டு கார்களும் கடவுப்பாதையை கடந்து விட்டன. மூன்றாவதாக வந்த டொயோட்டோ இன்னாவோ கார் கடக்கும்போது கேட் கீப்பர் உடனடியாக கேட்டை மூடிவிட்டார். இதனால் அந்த கார் இரு தண்டவாளங்களுக்கு இடையே நிறுத்தப்பட்டது. மற்ற கார்கள் உடனடியாக பின்னோக்கிச் சென்றதால் தண்டவாளத்தில் சிக்கவில்லை.கடவுப்பாதையில் தண்டவாளங்களுக்கு இடையே கார் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ஒரு சரக்கு ரயில் மற்றும் புறநகர் மின்சார ரயில் கடந்து சென்றது. அதன் பின் கடவுப்பாதை திறக்கப்பட்டவுடன் நடுவில் நின்ற கார் பாதுகாப்பாக வெளியே சென்றது. இச்சம்பவத்தால் ஏகாட்டூரில் பரபரப்பு ஏற்பட்டது.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago