உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கல் குவாரி சாலையில் ஆபத்தான பயணம்

கல் குவாரி சாலையில் ஆபத்தான பயணம்

குன்றத்துார்:குன்றத்துார் அருகே, சிக்கராயபுரம் ஊராட்சி உள்ளது. இங்கு 200 முதல் 400 அடி ஆழம் உடைய 23 கல்குவாரி குட்டைகள் உள்ளன. சென்னை குடிநீர் தேவைக்கு, இங்கிருந்தும் நீர் எடுக்கப்படுகிறது. இந்த கல்குவாரிகளுக்கு இடையே சாலை உள்ளது. இங்கிருந்து அரை கி.மீ., துாரம் பயணித்தால் குன்றத்துார் — குமணன்சாவடி சாலையையும், வண்டலுார் — மீஞ்சூர் வெளிவட்ட சாலையையும், எளிதாக சென்றடையலாம்.இந்நிலையில், இந்த கல்குவாரி இடையே தடுப்புக்கள் ஏதுமின்றி, குறுகலாக உள்ள சாலை வழியே சிக்கராயபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் வேன், கார், மோட்டார் சைக்கிளில் ஆபத்தான பயணம் செல்கிறன்றனர். இந்த வழியே செல்வோர், விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளதால் சாலையை மூட வேண்டும் அல்லது வாகனங்கள் செல்லும் வகையில், சாலை இருபுறமும் இரும்பு தடுப்புக்கள் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை