உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வணிகர்கள் அமைத்த பசுமை பந்தல்

வணிகர்கள் அமைத்த பசுமை பந்தல்

காஞ்சிபுரம்,காஞ்சிபுரத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாக, 42 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை நிலவி வருகிறது. கொளுத்தும் வெயிலில் போக்குவரத்து சிக்னல்களில், இரண்டு நிமிடங்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.சிக்னலில் நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை உத்தரவின்படி, போக்குவரத்து போலீசார் இரட்டை மண்டபம் சிக்னலில் பசுமை நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த சங்கூசாபேட்டை தெருவில், அப்பகுதி வணிகர்கள், ஏழு பேர் ஒன்றிணைந்து அத்தெருவில், நிழல்தரும் வகையில் பசுமை பந்தல் அமைத்துள்ளனர்.இதனால், காந்தி சாலையில் இருந்து, பேருந்து நிலையம், ராஜாஜி மார்க்கெட், பழைய ரயில் நிலையம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதிக்கு சங்கூசாபேட்டை வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள், பசுமை பந்தல் நிழலில், சில நிமிடங்கள் இளைப்பாறிவிட்டு செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை