உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரூ.10 லட்சத்துடன் வாலிபர் ஓட்டம்

ரூ.10 லட்சத்துடன் வாலிபர் ஓட்டம்

சென்னை : மேடவாக்கம், சந்தோஷ்புரத்தைச் சேர்ந்தவர் பாசில் அகமது, 48. இவர், 'டெக்னோ கிரிட்' எனும் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது தேவைக்காக நண்பரான அபிஷேக் என்பவரிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.வடபழனி கிரீன் பார்க் ேஹாட்டலில் இருக்கிறேன்; அங்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அபிஷேக் தெரிவித்துள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் மதியம் பாசில் அகமது, தன் நிறுவனத்தில் பணிபுரியும் விஜய் என்பவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்கு சென்றார். ஹோட்டலின் மூன்றாவது தளத்தில் உள்ள லாபியில் இருந்து அபிஷேக்கிடம் 10 லட்சம் ரூபாய் பெற்றார். அபிஷேக் பணத்திற்கு நான்கு காசோலைகள் கேட்டதால், பணத்தை விஜயிடம் கொடுத்து விட்டு காசோலை எடுக்க பாசில் அகமது கீழே சென்றுள்ளார்.திரும்பி வந்து பார்த்தபோது, பணத்துடன் விஜய் மாயமானது தெரியவந்தது. இது குறித்து வடபழனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை