உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குப்பை மேடாக மாறிவரும் ஆதனுார் சாலை

குப்பை மேடாக மாறிவரும் ஆதனுார் சாலை

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனுார் -- கொருக்கந்தாங்கல் சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நிலையில், ஆதனுார் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும், கழிவுகளை கொண்டுவந்து இந்த சாலையோரம் கொட்டி செல்கின்றனர். இதனால், இந்த பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதால், வாகன ஓட்டிகள்மற்றும் இப்பகுதியினர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், இந்த இறைச்சி கழிவுகளில் இரை தேடி வரும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டுபவர்களை கண்காணித்து, கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை