உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் விவசாய கண்காட்சி

காஞ்சியில் விவசாய கண்காட்சி

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழகம்இலவச கல்வி பயிற்சி மையம், இயற்கை விவசாய பயிற்சி மையம்மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டு இயக்கம் சார்பில், நவீன விவசாயம் குறித்தவிவசாயிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியும் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த இரண்டு நாள் கண்காட்சி துவக்க விழா நேற்று நடந்தது.மேல்மருவத்துார்ஆதிபராசக்தி கல்வி குழுமங்களின் நிர்வாகஇயக்குனர் கோ.ப.செந்தில் குமார், விழாவை துவக்கி வைத்தார்.தொடர்ந்து, விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை வழங்கினார். கண்காட்சியின் முதல் நாளான நேற்று, மருத்துவர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்று, தங்களது விவசாயம் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.கண்காட்சியில் இயற்கை உணவுகள், இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள், மூலிகை தைலங்கள், பாரம்பரிய நெல் விதைகள், சொட்டுநீர் பாசன முறைகள், காஞ்சிபுரத்தின் பாரம்பரிய வரலாறு மற்றும் ஓவியங்களும் இடம் பெற்றிருந்தன.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் துரைசிங்கம், தமிழகம் இலவச கல்வி பயிற்சி மையம் மற்றும் இயற்கை விவசாய பயிற்சி மைய நிறுவனர் எழிலன் ஆகியோர்செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை