உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காதலிப்பதில் போட்டி வாலிபரை வெட்டியவர் கைது

காதலிப்பதில் போட்டி வாலிபரை வெட்டியவர் கைது

சென்னை : ஒரே பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில், வாலிபரை கத்தியால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். நொளம்பூர், வேம்புலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஷ், 18. இவர், தன் நண்பர்களுடன் 3ம் தேதி இரவு நொளம்பூர் பிரதான சாலையில், சவர்மா கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர், லோகேஷ் மற்றும் நண்பர்களிடம் தகராறு செய்தனர். லோகேஷை கத்தியால் வெட்டி, தப்பி சென்றனர்.இதுகுறித்து, நொளம்பூர் போலீசார் விசாரித்தனர். இதில், முகப்பேர் மேற்கு ரெட்டிபாளையத்தை சேர்ந்த நாராயணமூர்த்தி, 21 என்பவரை நேற்று கைது செய்தனர். விசாரணையில், நாராயணமூர்த்தி நண்பரும், லோகேஷ் நண்பரும் ஒரே பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இதனால், ஏற்பட்ட பிரச்னை காரணமாக லோகேஷை வெட்டியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நாராயணமூர்த்தி மீது, அடிதடி வழக்கு உள்ளது. தலைமறைவாக உள்ள மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை