உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம், உயர் ரத்த அழுத்த நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காஞ்சி கிரிக்கெட் அகாடமி, லைப் கேர் மருத்துவமனை மற்றும் கிளேன் மார்க் நிறுவனம் சார்பில், காஞ்சியில்இலவச மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரத்தில் நடந்தது.இதில், தினமும் உடற்பயிற்சி, யோக செய்வோம். பதப்படுத்தப்பட்ட, உப்பு அதிகம் உள்ள உணவு வகைகளை தவிர்ப்போம். தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்வோம். குடும்பத்தினருடன் சிரித்து பேசி மகிழ்வோம், உயர் ரத்த அழுத்தம் வருவதை தடுப்போம் என்ற கோஷங்களை எழுப்பினர்.தொடர்ந்து, டாக்டர் அன்புச்செல்வன், பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம் பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ