உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

திருவேற்காடு:திருவேற்காடு, மகாலட்சுமி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் அறிவுடைநம்பி, 45. இவரது மகன் தயாநிதி, 15. இவர், 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.நேற்று காலை 10:30 மணியளவில் தயாநிதி, அதே பகுதியில் வசிக்கும் அவரது நண்பர் அம்ரித், 15, என்பவருடன், எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள அயனம்பாக்கம் ஏரியில் குளிக்கச் சென்றார்.தெர்மாகோல் மீது படுத்து குளித்த போது, திடீரென தெர்மாகோல் உடைந்து, தயாநிதி நீரில் மூழ்கி உள்ளார்.அதிர்ச்சியடைந்த அம்ரித் அவரை காப்பாற்ற முயன்றும் முடியாததால், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்துார் தீயணைப்பு துறையினர், தயாநிதி உடலை மீட்டனர்.உடலை கைப்பற்றிய திருவேற்காடு போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி