| ADDED : ஜூன் 01, 2024 06:05 AM
காஞ்சிபுரம், : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்யதேசங்களில், 57வது திவ்யதேசமாக விளங்கும் காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில், 'பரமேஸ்வர விண்ணகரம்' என அழைக்கப்படுகிறது.இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், 10 நாட்கள் பிரம்மோற்சவம் விமரிசையாக நடந்து வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம் இன்று அதிகாலை 4:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வைகுண்ட பெருமாள், ராஜ வீதியில் உலா வருகிறார். இதில், ஜூன் 3ம் தேதி கருடசேவை உற்சவமும், ஜூன் 7ம் தேதி காலை தேரோட்டமும், ஜூன் 9ம் தேதி காலை தீர்த்தவாரியும், இரவு முகுந்த விமானம், த்வஜ அவரோகணத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாட்டை ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோவில் பட்டாச்சாரியார்கள், உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.