| ADDED : ஜூலை 16, 2024 12:55 AM
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் மதில் சுவரை சுற்றியுள்ள பகுதியில் நிழல் தரும் மரங்கள் உள்ளன. இந்நிலையில் வடக்கு ராஜ கோபுரம் பகுதியில் உள்ள வேப்ப மரத்தின் கிளை ஒன்று கடந்த வாரம் ஒடிந்து விழுந்தது.சாலையோரம் விழுந்துள்ள மரக்கிளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றவில்லை. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், பாதசாரிகளுக்கும் மரக்கிளை இடையூறாக உள்ளது. சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நீண்டுள்ள மரத்தின் பாகத்தில் இடித்துக் கொண்டு விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, காமாட்சியம்மன் கோவில் வடக்கு வாசல் அருகில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஒடிந்து விழுந்த மரக்கிளையை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வி.பிரபாகரன், காஞ்சிபுரம்.