| ADDED : மே 09, 2024 12:07 AM
வாலாஜாபாத்,:வாலாஜாபாத்- - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக சாலை ஓரங்களில் இருந்த பேருந்து நிறுத்த பயணியர் நிழற்கூரை கட்டடங்கள், பல பகுதிகளில் இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.இதனால், பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர் நிழற்குடை வசதியின்றி வெயிலில் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு பழையசீவரம் மலை பஸ் நிறுத்தத்தில், அப்பகுதி ஊராட்சி நிர்வாகம் சார்பில் தென்னங்கீற்றாலான தற்காலிக நிழற்கூரை அமைக்கப்பட்டது.அதை தொடர்ந்து, இதேபோன்று பழையசீவரம் ரயில் நிலைய பஸ் நிறுத்தம், சங்கராபுரம், உள்ளாவூர் உள்ளிட்ட பகுதி பேருந்து நிறுத்தங்களிலும் பயணியர் வசதிக்காக, தற்காலிக நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.கோடைக்கால வெயிலின் தாக்கத்தில் இருந்து, சற்று மீள்வதற்கு இந்த நடவடிக்கை உதவியாக உள்ளதாக பயணியர் வரவேற்றுள்ளனர்.