| ADDED : ஜூன் 25, 2024 11:48 PM
காஞ்சிபுரம், மழை காலத்தில், சாலை விரிவாக்க இடங்களில், தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி நெடுஞ்சாலை துறைக்கு அறிவுரை வழங்கினார். காஞ்சிபுரத்தில், சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட பணிகள் நடந்து வருகின்றன.குறிப்பாக, செவிலிமேடு முதல், ஓரிக்கை மிலிடெரி சாலை வரை விரிவாக்க பணிகள் மற்றும் மழை நீர் வடிகால் பணிகளை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று ஆய்வு செய்தார். இதையடுத்து, உத்திரமேரூர் சாலை ஆசிரியர் காலனி, ரயில்வே சாலை வடி கால்வாய் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.மழை காலத்தில், சாலை விரிவாக்க இடங்களில், தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி நெடுஞ்சாலை துறைக்கு அறிவுரை வழங்கினார்.