| ADDED : மே 07, 2024 03:56 AM
வாழையிலை கழிவுகளால்வாகன ஓட்டிகள் அவதிஸ்ரீபெரும்புதுார் --- மணிமங்கலம் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் இந்த முக்கிய சாலையில், இரவு நேரங்களில், மர்ம நபர்கள் சிலர், வாழை இலை கழிவுகளை சாலையின் ஓரம் கொட்டுகின்றனர். இவை நாளடைவில் காய்ந்து, காற்று வேகமாக வீசும் போது, அவ்வழியாக செல்லும் வாகனங்களின் மீது விழுந்து, வாகன ஓட்டிகளின் கண்களை மறைக்கிறது. இதனால், நிலைத் தடுமாறும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து, வாகனத்தில் இருந்து விழுந்து விபத்தில் சிக்கி, காயமடைந்து வருகின்றனர்.எனவே, சாலையோரங்களில், குப்பை, இலை, இறைச்சி கழிவுகள் கொட்டுபவர்களை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மு. தமிழ்வாணன், ஸ்ரீபெரும்புதுார்.