உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாதில் திறந்தவெளி கிணறுகள் மாயம் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் குற்றச்சாட்டு

வாலாஜாபாதில் திறந்தவெளி கிணறுகள் மாயம் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் குற்றச்சாட்டு

வாலாஜாபாத்:காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. வாலாஜாபாத் பேரூராட்சி தி.மு.க., தலைவர் இல்லாமல்லி தலைமை வகித்தார். துணை தலைவர் ஏ.வி.சுரேஷ்குமார், வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., அரிகுமார்: வாலாஜாபாத் பேரூராட்சி இருசக்கர வாகன நிறுத்தங்களுக்கு, ஓராண்டாக ஏலம் விடாமல் இருக்கின்றன. இதற்கு, பேரூராட்சி நிர்வாகம் இலவசமாக வாகன நிறுத்தத்தை அறிவித்து விடலாம்.செயல் அலுவலர் சரவணன்: கலெக்டரிடம் கூறி, வாகன நிறுத்தங்களுக்கு டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்படும்.தி.மு.க., கருணாகரன்: வாலாஜாபாத் பேரூராட்சியில், 20க்கும் மேற்பட்ட குடிநீர் கிணறுகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு இருந்தன.ராஜவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்த கிணறுகளை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், குடிநீராதாரங்கள் மாயமாகியுள்ளன. இதை முறையாக ஆய்வு செய்து, பாதுகாக்க நடவடிக்கை வேண்டும். செயல் அலுவலர் சரவணன்: ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.அ.தி.மு.க., அரிகுமார்: வாலாஜாபாத் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரி இனங்கள் செலுத்தாமல் பாக்கி உள்ளது. அத்தொகை குறித்து, கணக்கீடு செய்து முறையாக வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சரவணன்: ஏற்கனவே கணக்கிடப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. வரி பாக்கி தொகை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.தி.மு.க., கருணாகரன்: தெரு மின் விளக்கு சரியாக எரிவதில்லை. சரவணன்: தரமான பல்புகள் வாங்கி பொருத்தப்படும்.தி.மு.க., வெங்கடேசன்:வாலாஜாபாத்தில், இறைச்சி கடைகளிலும், தனியார் திருமண மண்டபங்களிலும் இருந்து வெளியேற்றப்படும்கழிவுகளை, பேரூராட்சிக்குசொந்தமான திடக்கழிவு மேலாண்மை திட்ட வள மீட்பு பூங்கா பகுதிக்கு மூட்டை, மூட்டையாக கொண்டு வந்து மர்ம நபர்கள் கொட்டிவிட்டு செல்கின்றனர். எனவே, வளமீட்பு பூங்கா பகுதியில், 'சிசிடிவி' கேமரா அமைக்க வேண்டும். இறைச்சி கழிவுகள் மற்றும் உணவுக் கழிவுகளை கொட்டும் நபர்களுக்கு, அபராதம் விதிக்க வேண்டும்.சரவணன்: முறையாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.தி.மு.க., கலைவாணி: வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும், தனிநபர் கழிப்பறை கட்டப்பட்டு சுகாதார இயக்கத்தின் கீழ் பயன்பாட்டில் உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.சரவணன்: தனி நபர் கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு கட்டித்தரப்படும்.தி.மு.க., துணை தலைவர்ஏ.வி.சுரேஷ்குமார்: பேரூராட்சி வார்டுகளில் வடிநீர் கால்வாய் பணி செய்வதற்கு முன்னதாக தெருக்களில் குடிநீர் குழாய் பதித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை