உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டெங்கு தடுப்பு நடவடிக்கை சுகாதார பிரிவு ஊழியர்கள் தீவிரம்

டெங்கு தடுப்பு நடவடிக்கை சுகாதார பிரிவு ஊழியர்கள் தீவிரம்

காஞ்சிபுரம்: பருவநிலை மாற்றம் காரணமாக, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால், காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க, மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.அதன்படி, காஞ்சிபுரம் மாநகராட்சி பொது சுகாதார துறை சார்பில், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும், வீடு வீடாக சென்று ஆய்வு செய்கின்றனர்.இதில், வீட்டில் யாருக்காவது காய்ச்சல் உள்ளதா, டெங்கு கொசு உற்பத்தியாக காரணமான, திறந்தவெளியில் தண்ணீர் தேங்கி உள்ளதா, தண்ணீர் சேமித்து வைத்துள்ள பாத்திரங்கள் மூடப்பட்டுள்ளதா என, கள ஆய்வு செய்கின்றனர்.மேலும், நல்ல தண்ணீரில் உருவாகும், 'ஏடிஸ்' கொசுக்களை அழிக்கும் வகையில், வீட்டை சுற்றிலும் திறந்தவெளியில் உள்ள உடைந்த மண் பாண்டங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டை, டீ கப் மற்றும் வாகனத்தின் பழைய டயர்களை, டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை