உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிதிலமடைந்த பேரணக்காவூர் சாலை

சிதிலமடைந்த பேரணக்காவூர் சாலை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்டது பேரணக்காவூர் கிராமம். இங்கிருந்து, சாலவாக்கம் மற்றும் வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல அப்பகுதி விவசாய நிலங்கள் மற்றும் காட்டு வழியாக 1 கி.மீ., துாரம் கொண்ட சாலை உள்ளது.இச்சாலையை பயன்படுத்தி அப்பகுதியினர், அருங்குன்றம்- - சாலவாக்கம் இணைப்புச் சாலை பகுதிக்கு வந்து அங்கிருந்து பேருந்து பிடித்து,பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.இந்நிலையில்,இந்தசாலை பகுதி சில ஆண்டுகளாக மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகும் நிலை உள்ளது.அவசர நேரங்களில் இச்சாலையை உடனடியாக கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிபடுகின்றனர்.எனவே, பழுதடைந்த இச்சாலையை சீர் செய்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி