உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சன்மார்க்க சங்கம் நிர்வாகிகள் தேர்வு

சன்மார்க்க சங்கம் நிர்வாகிகள் தேர்வு

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சன்மார்க்க சங்கங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாக உறுப்பினர் தேர்தலுக்கான கூட்டம் ஜெயவேல் தலைமையில் நேற்று நடந்தது.இதில், மாவட்ட சன்மார்க்க சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், மாவட்ட தலைவராக எழிலரசன், செயலராக வெங்கடேசன், பொருளாளராக உமேஷ் குமார், துணை செயலராக மாணிக்கவேல், கவுரவ ஆலோசகராக ஜோதி கோடீஸ்வரன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.வடலுாரில் சர்வதேச மையத்தின் வாயிலாக வள்ளல் பெருமானின் கொள்கையை உலகிற்கு எடுத்துக்காட்ட 100 கோடி ரூபாய் ஒதுக்கிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் சேகர்பாபுவிற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை