உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின் தொழிலாளர் சங்கம் பொதுக்குழு கூட்டம்

மின் தொழிலாளர் சங்கம் பொதுக்குழு கூட்டம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட மின் தொழிலாளர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் சங்க தேர்தல் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. சங்க முன்னாள் தலைவர் குமார் தலைமை வகித்தார். இதில், சங்க வரவு -- செலவு சரிபார்த்தல், கடந்த ஆண்டு ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தில் சங்கம் சார்பில் நடந்த யானை வாகன உற்சவத்திற்கான வரவு- - செலவு சரிபார்க்கப்பட்டது. கட்டுமான தொழிலாளர் நலவாரிய சங்கத்தினர், உறுப்பினர், அடையாள அட்டை பெறுதல் மற்றும் புதுப்பித்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து சங்கத்தின் பொறுப்பாளர் மற்றும் நிர்வாகிகள் சங்க தேர்தல் நடந்தது.இதில்,தலைவராக எம்.மூர்த்தி, பொதுச் செயலராக எம்.சிவாஜி, பொருளாளராக கே.ரஜினிகாந்த் ஆகியார் சங்க நிர்வாகிகளாக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை