உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஈஞ்சம்பாக்கம் பள்ளி சுற்றுச்சுவர் சேதம்

ஈஞ்சம்பாக்கம் பள்ளி சுற்றுச்சுவர் சேதம்

ஈஞ்சம்பாக்கம் : காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில், அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது. இந்த பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், படித்து வருகின்றனர்.இந்த பள்ளி வளாகத்திற்கு போடப்பட்ட சுற்றுச்சுவர், சமீபத்தில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், ஆடு, மாடுகள் பள்ளி வளாகத்திற்குள் எளிதாக பிரவேசிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.பள்ளி திறப்பிற்குப் பின், ஆடு, மாடுகளால் விபத்து ஏற்படும் முன், பள்ளி கல்வித் துறை நிர்வாகம், சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ